கையில் வாளுடன் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவை ஆவேசத்துடன் தேடிய நபர்
கையில் வாளுடன் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவை ஆவேசத்துடன் தேடிய நபர் ஒருவர் இன்று பிலியந்தல ஜாலியகொட பிரதேசத்தில் பொலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையில் வாளுடன் உலாவிய இந்த இந்த நபர் இப்பிரதேசத்தில் இருந்த பொது மக்களுக்கு வாக்குவாதப்பட்டு அவர்களை தூசனத்தில் ஏசியத்துடன்?அவர்களை அச்சுறுத்தி உள்ளார்.
மக்கள் இவரை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிக்கையில் அவர் லொரி ஒன்றின் மீது ஏறி ஜனாதிபதி எங்கே இருக்கிறார் அவரை நான் சந்திக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இந்த?வாளினால் எனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்து கொள்வேன் என எச்சரித்துள்ளார்.
நிலைமை மோசமாகவே பிரதேச மக்கள் பொலீசாருக்கு அறிவித்ததை அடுத்து பொலீசார் அந்நபரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கையில் இருந்த வாளை பறிமுதல் செய்துள்ளனர்…
பின்னர் பொலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஒரு மன நோயாளி எனவும் அதற்கான சிகிச்சைகளை அவர் பெற்று வருவதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
அதன் பின் 1990 இலக்கத்துக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டு அவர் எம்பியூலன்சில் களுபோவில வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.