இலங்கை வந்த இந்திய மீட்பு குழுவினர் நாடு திரும்பினர்.
நாட்டில் ஏற்பட்ட சீறற்ற காலநிலை பல்வேறு இடங்களில் வெள்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டது இந்த சூழ்நிலையை எதிர்கொண்டு போராடிய இலங்கை மக்களுக்கு நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்குவதற்காக இலங்கைக்கு வந்த 80 பேர் கொண்ட இந்திய மீட்பு குழுவினர் இன்று (2025.12.05) நாட்டை விட்டு புறப்பட்டனர்.
நமது நாடு எதிர்கொண்ட மிகவும் கடினமான நேரத்தில் அவர்கள் செய்த விதிவிலக்கான அர்ப்பணிப்பு, உடனடி பதில் மற்றும் உயிர்காக்கும் நடவடிக்கைகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை, மேலும் இந்த குழு மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நிவாரண சேவைகளை வழங்குவதன் மூலம் மேற்கொண்ட மனிதாபிமான நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இலங்கை மக்களின் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும்.




