டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு!
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு மீளப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமாக இருக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
முன்னதாக அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.66 ஆக இருந்தது. இது இனிவரும் காலங்களில், 82.80-82.84 ஆக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
மேலும் ரூபாய் பணச் சந்தை விகிதங்கள் அதிக பணப்புழக்கம் காரணமாக கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 3 times, 1 visits today)