சிங்கப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இளம் பெண்ணின் சடலம்
சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் சமையலறை ஜன்னலுக்கு வெளியே சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
29 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே இறந்து கிடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் 25ஆம் திகதிஅன்று காலை 6:20 மணியளவில், பிளாக் 104 புக்கிட் பாடோக் சென்ட்ரலின் மூன்றாவது மாடியில் உள்ள வீட்டில் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
வலைத்தளங்களில் பரவிய காணொளியில், அவர் ஒரு பணிப்பெண் என்று சிலர் ஊகித்து கருத்து கூறுகின்றனர்.
மேற்கண்ட முகவரியின் சமையலறை ஜன்னலுக்கு வெளியே அவர் தொங்கியதைக் கண்டதாகக் SCDF கூறியது.
அதன் பின்னர், அந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டது. இறந்தவர் 29 வயதான பெண் என்பதும், இது இயற்கைக்கு மாறான மரணம் என்றும் பொலிஸார் வகைப்படுத்தினர்.
(Visited 6 times, 1 visits today)