இங்கிலாந்துடன் பலப்பரீட்சை : இலங்கை அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
பல்லேகலே மைதானத்தில் நடைபெறும் சூப்பர் 8 சுற்றின் இரண்டாவது போட்டி இதுவாகும். இன்றைய போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது. இதற்கமைய கேப்டன் தசுன் ஷனக முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடாத துஷ்மந்த சமீர மற்றும் கமில் மிஷாரா ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதன் காரணமாக குசல் ஜனித் மற்றும் பிரமோத் மதுஷான் ஆகியோர் தங்கள் இடங்களை இழந்துள்ளனர்.




