லண்டனில் பரபரப்பு : பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலர் கைது!
பிரித்தானியாவில் பாலஸ்தீன அமைப்பிற்கு ஆதரவாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர்.
டிரஃபால்கர் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒன்றுக்கூடி போரட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது “நான் இனப்படுகொலையை எதிர்க்கிறேன். நான் பாலஸ்தீன நடவடிக்கை அமைப்பை ஆதரிக்கிறேன்” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி தரையில் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில் போராட்டத்தை கண்காணிக்க நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பணியில் இருந்தனர். அவர்கள் பெண்கள் முதியவர் உட்பட பல நபர்களளை வெளியே அழைத்துச் சென்று கைது செய்தனர்.
இந்தக் கைதுகளுக்கு எதிர்வினையாற்றிய போராட்டக்காரர்கள், அதிகாரிகளைப் பார்த்து, “பெண்களைத் துன்புறுத்துவதை நிறுத்துங்கள்” என்றும் “உங்களுக்கு வெட்கமாக இல்லையா” என்றும் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.





