இலங்கை செய்தி

விலைபோகாத தலைவரே மாவை: திருவுருவச் சிலையை திறந்து வைத்து ஆளுநர் உரை!  

  • January 31, 2026
  • 0 Comments

“ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா Mavai.C.Senathirasa பதவி ஆசையற்றவர், சலுகைகளுக்கு விலைபோகாதவர்.” இவ்வாறு வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் N.Vedhanayagan புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மிகச் சிறந்ததொரு மனிதரை நாம் இழந்திருக்கின்றோம் எனவும் அவர் கூறினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற மாவை.சோ.சேனாதிராசாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாவிட்டபுரத்தில் அவரது உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி திருவுருவச் சிலை வடக்கு மாகாண […]

அரசியல் இலங்கை

தமிழரசுக் கட்சிக்கள் உள்ளக மோதல்: ஸ்ரீதரனை குறிவைக்கும் சுமந்திரன்!

  • January 26, 2026
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ITAK சுமந்திரன் Sumanthiran மற்றும் சிறிதரன் S iridharan ஆகியோருக்கிடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ளது. இருவரும் வெளிப்படையாக மோதிக்கொள்ளாவிட்டாலும் கட்சிக்குள் வெட்டு குத்து படலம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நீக்குவதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். “ நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவி, சிறிதரனுக்கு தமிழ் அரசுக் […]

அரசியல் இலங்கை செய்தி

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக 30 திகதி போராட்டம்!

  • January 26, 2026
  • 0 Comments

கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு, நெடுங்கேணியில் இப்போராட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நடக்கும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு, முல்லைத்தீவு கிழக்கில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் கிவுல்ஓயா திட்டத்தை மீண்டும் செயற்படுத்த அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்த திட்டத்தைக் கைவிடச் செய்வதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும், இதுதொடர்பான […]

அரசியல் இலங்கை செய்தி

யாழில் சாபக்கேடான அரசியல் முன்னெடுப்பு: தமிழரசுக் கட்சிமீது அமைச்சர் பாய்ச்சல்!

  • January 16, 2026
  • 0 Comments

“ யாழ்ப்பாணத்திலும் சாபக்கேடான அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. அவ்வாறான அரசியலில் இருந்தும் நாம் மீள வேண்டும்.” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekhar தெரிவித்தார். ” முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசியச் செயற்பாடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (16) யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘அகன்று செல்” என்ற தொனிப்பொருளில், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் […]

அரசியல் இலங்கை செய்தி

பிரதமருக்கு கை கொடுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகள்!

  • January 11, 2026
  • 0 Comments

கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு Harini Amarasooriya எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்காதிருக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. மேற்படி பிரேரணைக்கு தமது கட்சி ஆதரவளிக்காது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் எஸ்.சிறீதரன் S. Sritharan தெரிவித்தார். “தற்போதைய அரசியல் சூழலில் இந்தப் பிரேரணை ஒரு கொள்கைச் சண்டையாக விட, அரசியல் அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஆதரவளிக்காது என தெரியவருகின்றது. “ […]

அரசியல் இலங்கை செய்தி

வடக்கில் பொலிஸ் அராஜகமா? சபையில் சிறிதரன் – சந்திரசேகர் கடும் சொற்போர்!

  • January 6, 2026
  • 0 Comments

அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகருக்கும் Ramalingam Chandrasekhar , நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனுக்கும் S. Siridharan இடையில் சபையில் Parliament இன்று சொற்போர் மூண்டது. நாடாளுமன்றத்தில் இன்று (06) நடைபெற்ற விவாதத்தின்போது வடக்கு, கிழக்கில் பொலிஸ் அராஜகம் இடம்பெறுவதாக சிறிதரன் எம்.பி. குற்றஞ்சாட்டினார். வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டதை அதற்கு உதாரணம் காட்டினார். அத்துடன், தமிழர் விவகாரம் தொடர்பில் NPP அரசின் அணுகுமுறையையும் அவர் விமர்சித்தார். இதற்கு தனது உரையின்போது அமைச்சர் சந்திரசேகர் பதிலடி கொடுத்தார். “ வடக்கில் […]

அரசியல் இலங்கை செய்தி

தமிழர்களுக்கு நீதியையும், நிலையான தீர்வையும் வழங்குக!

  • January 6, 2026
  • 0 Comments

தமிழர்களுக்கு நீதியையும், நிலையான அரசியல் தீர்வையும் வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் NPP முன்வரவேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் எஸ்.சிறிதரன் S. Siritharan வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, “ யாழ். தையிட்டி காணி உரிமையாளர்கள் அறவழியிலேயே போராடினார்கள். ஆனால் அவர்கள்மீது பொலிஸார் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டனர். வேலன் சுவாமிகள் மிக மோசமாகக் கைது செய்யப்பட்டார். பொலிஸார் அராஜகத்தில் ஈடுபட்டனர். பௌத்த […]

error: Content is protected !!