அரசியல் இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டம் நீடிப்பு : எதிரணி போர்க்கொடி!

  • February 6, 2026
  • 0 Comments

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை Emergency Law மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (06) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டார். அவசரகாலச் சட்டத்தை இந்த அரசாங்கம் ஒடுக்குமுறைக்காக பயன்படுத்துகின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். எனவே, அச்சட்டத்தை நீடிப்பதற்கு எதிராகவே வாக்களிக்கப்படும் […]

அரசியல் இலங்கை செய்தி

கிவுல் ஓயாத் திட்டத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு: கைவிடுமாறு வலியுறுத்து!

  • January 26, 2026
  • 0 Comments

கிவுல் ஓயாத் திட்டம் முழுமையாகக் கைவிடப்பட வேண்டும் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்ணி Democratic Tamil National Alliance வலியுறுத்தியுள்ளது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் Suresh K. Premachandran இது தொடர்பான வலியுறுத்தலை இன்று (26) விடுத்துள்ளார். இது தொடர்பில் அவரால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளவை வருமாறு , ” கிவுல் ஓயா என்ற ஒரு நீர்ப்பாசனத் திட்டத்துக்கான […]

அரசியல் இலங்கை செய்தி

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக 30 திகதி போராட்டம்!

  • January 26, 2026
  • 0 Comments

கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு, நெடுங்கேணியில் இப்போராட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நடக்கும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு, முல்லைத்தீவு கிழக்கில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் கிவுல்ஓயா திட்டத்தை மீண்டும் செயற்படுத்த அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்த திட்டத்தைக் கைவிடச் செய்வதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும், இதுதொடர்பான […]

அரசியல் இலங்கை செய்தி

சிங்கள, பௌத்த வாக்குகளாலேயே அநுர பதவிக்கு வந்தார்: மார்தட்டிக்கொள்கிறது மஹிந்த அணி!

  • January 21, 2026
  • 0 Comments

சிங்கள, பௌத்த வாக்குகளால் பதவிக்கு வந்துவிட்டு வடக்குக்கு சென்று அவர்களை காட்டிக்கொடுக்கும் விதத்தில் ஜனாதிபதி செயல்படக்கூடாது – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான, முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ ஜனாதிபதி தேர்தலின்போது வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தோல்வி அடைந்தார். நாடு முழுதும் 42 சதவீத வாக்குகளை கிடைக்கப்பெற்றது. இதில் பெரும்பாலான விகிதம் சிங்கள, பௌத்த […]

அரசியல் இலங்கை செய்தி

அநுரவின் யாழ். உரைக்கு வலுக்கிறது எதிர்ப்பு!

  • January 19, 2026
  • 0 Comments

இலங்கையில் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடனேயே வாழ்கின்றனர். எனவே, இல்லாத இனவாதம் பற்றி கதைப்பதுதான் பிரச்சினை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் S.M. Marikar மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கு விஜயம் செய்யும்போது அந்தந்த பகுதி மக்களை திருப்திபடுத்தும் வகையில் ஜனாதிபதி கருத்துகளை முன்வைத்துவருகின்றார். இது […]

அரசியல் இலங்கை செய்தி

நாட்டுக்கு பொருத்தமான கல்வி மறுசீரமைப்பே அவசியம் – விமல்

  • January 16, 2026
  • 0 Comments

” நாட்டில் கல்வி மறுசீரமைப்பென்பது Education reform சிறப்பான பண்புகளுடன் இடம்பெற வேண்டும் என்பதை ஏற்கின்றோம்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச Wimal Weerawansa தெரிவித்தார். எனினும், கட்சியொன்றின் தேவைக்காக உருவாக்கப்படும் கல்வி முறைமையை ஏற்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். “ கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கை. அப்பணியை முன்னெடுக்கும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்பது இரண்டாவது விடயமாகும். எனவே, எமது முதலாவது […]

அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டம்: புதிய ஏற்பாட்டுக்கு முன்னாள் நீதி அமைச்சர் போர்க்கொடி!

  • December 26, 2025
  • 0 Comments

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தை நாடுவேன்.” என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapaksa) தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு (Prevention of Terrorism Act) பதிலீடாகவே மேற்படி சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பது தொடர்பான உத்தேச சட்டவரைவு முன்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் பெப்ரவரி 28 ஆம் திகதிவரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே முன்னாள் நீதி அமைச்சர் (former Justice Minister) விஜயதாச […]

error: Content is protected !!