அரசியல் இலங்கை

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மீண்டும் அழுத்தம்!

  • November 25, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்தியுள்ளார். என்.பி.பி. அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது என்பதை நுகேகொடைக் கூட்டம் வெளிப்படுத்தியது என்பதை சுட்டிக்காட்டியே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். “ நுகேகொடை கூட்டம் வெற்றியளித்துள்ளது. பொய்கள்மூலம் இனியும் நாட்டை ஆளமுடியாது என்பதை இனியாவது ஆட்சியாளர்கள் உணர வேண்டும். அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது. அவ்வாறு இல்லை, மக்கள் ஆதரவு தமக்கு […]

அரசியல் இலங்கை

மாகாணசபைத் தேர்தல்: சஜித் அணி எடுத்துள்ள முடிவு!

  • November 13, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவக்குழு கூட்டம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்றிரவு கூடியது. இதன்போது வரவு- செலவுத் திட்டம் உட்பட சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. அவ்வேளையிலேயே அடுத்த வருடம் ஆரம்பத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியல் சமரை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆளுகையின்கீழ் […]

இலங்கை

முதலமைச்சர் பதவிக்காக எதிரணிகளின் சார்பில் பொதுவேட்பாளர்கள்

  • November 6, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக எதிரணிகளின் சார்பில் பொதுவேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட எதிரணிகளிலுள்ள சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் அரசாங்கத்தக்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளன. இந்நடவடிக்கைக்கு பிறகும் எதிரணி கூட்டு தொடர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சிசபைத் தேர்தல்களில் […]

இலங்கை

மாகாணசபைத் தேர்தலுக்கு சஜித் அணி தயார்: வெளியானது அறிவிப்பு!

  • October 28, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் விரைவில் நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க மேற்கண்டவாறு வலியுறுத்தினார் . இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், ” மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும். பழைய முறைமையின்கீழ் அத்தேர்தலை நடத்தலாம். அவ்வாறு இல்லையேல் தேர்தல் மேலும் இழுத்தடிக்கப்படக்கூடும். விரைவில் தேர்தல் நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு […]

இலங்கை

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்!

  • October 21, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீறிவிட்டது என  ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (21) குற்றஞ்சாட்டினார். தேர்தல் சம்பந்தமாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒருவருட காலப்பகுதிக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி வழங்கி இருந்தது. எனினும், ஒரு வருடம் […]

error: Content is protected !!