தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மோதல் – ஒருவர் பலி
ஹோமாகம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர் நடத்திய விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருந்து நிகழ்வின் போது, மாணவர்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தர்க்கம் பின்னர் மோதலாக மாறியதில் குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த மாணவரின் உடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதேவேளை, இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் […]




