இலங்கை

தொடரும் உதவிகள்: தமிழக நிவாரணமும் கையளிப்பு!

  • December 8, 2025
  • 0 Comments

இலங்கை மக்களுக்காக, தமிழக அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட 300 மெட்ரிக் தொன் அவசர நிவாரணப் பொருட்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. தமிழக அரசினால் அனுப்பப்பட்ட 1000 தொன் நிவாரணப் பொருட்களில் ஒரு பகுதியான 300 மெட்ரிக் தொன் பொருட்கள், இந்திய கடற்படையின் 3 தரையிறங்கு கலங்கள் மூலம், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. மேலும் 700 தொன் உதவிப் பொருட்களை ஏற்றிய மற்றொரு கப்பல் இன்று காலை திருகோணமலையை வந்தடையவுள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பொருட்களை, இந்திய தூதுவர் […]

இலங்கை

இலங்கையர் தினம் இரத்து?

  • December 8, 2025
  • 0 Comments

இலங்கையில் அடுத்த வாரம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இலங்கையர் தின நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது என்று சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் நிலையை அடுத்தே ஜனாதிபதியால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையர் தின நிகழ்வுகளை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 300 மில்லியன் ரூபாயை நிவாரண நடவடிக்கைக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாதம் 12,13 மற்றும் 15 ஆம் திகதிகளில் இலங்கையர் தின நிகழ்வை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

அவசர கால சட்டம்: மனித உரிமை ஆணைக்குழு அதிருப்தி! 

  • December 8, 2025
  • 0 Comments

பேரிடரைத் தொடர்ந்து நவம்பர் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட அவசரகால விதிமுறைகள் குறித்து கவலை தெரிவித்து, மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. பேரிடர் மற்றும் மீட்பு சவால்களின் அளவை ஒப்புக்கொண்டாலும், அவசரகாலச்சட்டத்தின் பல விதிகள், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மற்றும் அனைத்துலக மனித உரிமைகள் தரநிலைகளுக்கு முரணானவை என்று மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது சொத்துக்களைக் கோருவதற்கான பரந்த அதிகாரங்கள், கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 365 […]

இலங்கை

அமைச்சர் சுனில் ஹந்துனெத்தியை கைது செய்யுமாறு தேரர் வலியுறுத்து!

  • December 6, 2025
  • 0 Comments

அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி அவசரகால சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்று மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி. வலவாஹங்குனவெவே தம்மரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். விசேட ஊடக சந்திப்பொன்றை இன்று நடத்தியே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். “மட்டக்களப்புக்கு சென்றிருந்த அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, மல்வத்து ஓயா நீர் நிலை தொடர்பில் தவறான கருத்தை வெளியிட்டிருந்தார். எனவே, அவரைதான் முதலில் அவசரகால சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும். மல்வத்து ஓயா நீர் தொடர்பில் அவர் முரணான தகவலை […]

இலங்கை

கண்டி மாவட்டத்தில் 1,881 வீடுகள் சேதம்!

  • December 6, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 51 ஆயிரத்து 98 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 232 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். 81 பேர் காணாமல்போயுள்ளனர். வெள்ளம், மண்சரிவால் ஆயிரத்து 800 வீடுகள் முழமையாகவும், 13 ஆயிரத்து 44 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 8 ஆயிரத்து 992 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்து 670 பேர் இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் இலங்கை

நீர்பாசனத்துறை அமைச்சருக்கு ஜம்பர் அணிவிப்போம்: சாமர எம்.பி. எச்சரிக்கை!

  • December 6, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நீர்பாசனத்துறை அமைச்சருக்கு ஜம்பர் அணியவேண்டிய நிலை (சிறை தண்டனை) ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எச்சரித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். “ மண்சரிவு அனர்த்தம் பற்றி நான் எதையும் கூற விரும்பவில்லை. ஆனால் படிப்படியாக நீரை திறந்திருந்தால் பாரிய வெள்ள அனர்த்த நிலை ஏற்பட்டிருக்காது. இதற்கு சம்பந்தப்பட்ட தரப்பு பொறுப்பு கூறவேண்டும். பன்னலயில் முதியவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர். இப்படியான துயர் சம்பவங்கள் […]

இலங்கை

இலங்கை மீண்டெழும் திட்டம் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கம்!

  • December 6, 2025
  • 0 Comments

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர்களில் இருந்து மீண்டு வருவதற்குரிய தேசிய மீட்சி மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பில் இராஜதந்திர சமூகத்துக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் தலைமையிலேயே இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது. அவசரகால சூழ்நிலையின்போது வழங்கப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் உதவிக்காகவும் அனைத்து இராஜதந்திரத் தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் ஏனைய கூட்டாளர்களுக்கு பிரதமர் அமரசூரிய இதன்போது நன்றி தெரிவித்தார். இலங்கை இப்போது அவசரகால பதிலளிப்பு கட்டத்திலிருந்து, மீட்பு […]

அரசியல் இலங்கை

அவசரகால சட்டத்தை அடக்குமுறை ஆயதமாக பயன்படுத்தவில்லை: ஜனாதிபதி விளக்கம்!

  • December 6, 2025
  • 0 Comments

மக்களை பாதுகாப்பதற்காகவே அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டது. மாறாக மக்களை ஒடுக்குவதற்கு அது பயன்படுத்தப்படவில்லை. அரசமைப்பைமீறும் வகையில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தைத் தயாரிப்பது அனைத்து அமைச்சுகளினதும், அரச திணைக்களங்களினதும் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களினதும் கடமை ஆகும். எனினும், அத்தகைய திட்டம் எதுவும் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. அதன்படி, இந்த நேரத்தில் அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் செயல்படுதல் பலவீனமாக உள்ளது […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களை கைவிடோம்: ஜனாதிபதி உறுதி

  • December 5, 2025
  • 0 Comments

“ சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மண்சரிவால் வீடுகளை இழந்தவர்களுக்கு காணி வாங்குவதற்கும், வீடு அமைப்பதற்கும் நிதி வழங்கப்படும்.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு, தம்முடன் தற்போது வாழவேண்டியவர்களை நாம் இழந்து தவிக்கின்றோம். சில பகுதிகளில் கிராமங்களே மூழ்கியுள்ளன. உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சிலர் உயிரிழந்திருந்தாலும் […]

அரசியல் இலங்கை

அரசு பொறுப்புகூற வேண்டும்: சஜித் வலியுறுத்து

  • December 5, 2025
  • 0 Comments

வளிமண்டலவியல் திணைக்கள் அதிகாரிகள் 15 நாட்களாக முன் அறிவிப்புச் செய்து கொண்டிருந்த வேளை, தூங்கிக் கொண்டிருந்த அரசாங்கம், அனர்த்தம் ஏற்பட்ட பின்பு வானிலை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏற்புடையது அல்ல என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, ” நாட்டில் புயல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று சிலர் […]

error: Content is protected !!