விளையாட்டு

சதத்தை தவறவிட்ட குசல் மெண்டிஸ்: 272 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

  • January 22, 2026
  • 0 Comments

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் இலங்கை அணி 271 ஓட்டங்களைக் குவித்துள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி ஆரம்பமானது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 271 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் Kusal Mendis ஆட்டமிழக்காமல் 93 ஓட்டங்களை விளாசினார். ஜனித் லியகனே Janith Liyanage 46 ஓட்டங்களைப் பெற்றார். இங்கிலாந்து அணி சார்பில் Adil Rashid மூன்று விக்கெட்டுகளை […]

இலங்கை செய்தி

இலங்கையின் விவசாயத்துறையை மேம்படுத்த சீனா நேசக்கரம்!

  • January 22, 2026
  • 0 Comments

இலங்கையில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்குரிய ஒத்துழைப்பை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது. சீன – இலங்கை விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறும். மேற்படி ஒப்பந்தத்தின் பிகாரம் இலங்கையின் விவசாயத் துறையிலும் அது சார்ந்த சுற்றுச்சூழல் ரீதியாகவும் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது. சீனாவும் இலங்கையும் இணைந்து முன்னெடுக்கும் வேலைத்திட்டமாக, நாட்டின் […]

இலங்கை செய்தி

ராஜபக்ச அணிக்கு டெல்லி அழைப்பு: குடியரசு தின நிகழ்விலும் பங்கேற்பு!

  • January 22, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச Mahinda Rajapaksa தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் உயர்மட்ட குழுவொன்று இந்தியா செல்லவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa  தலைமையிலான குழுவினரே டெல்லி செல்லவுள்ளனர். இந்தியாவின் குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்கு, இந்திய அரசாங்கம் இலங்கையின் முக்கிய தரப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் உள்ளடங்குகின்றது. இதற்கமையவே மொட்டு கட்சி குழுவினர் இந்தியா செல்லவுள்ளனர். […]

இலங்கை செய்தி

மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும்: ஐ.நா. பிரதிநிதியிடம் பிரதமர் உறுதி!

  • January 22, 2026
  • 0 Comments

ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் UNDP பிரதிநிதி அலெக்சாண்டர் டி குரூவுடன் Alexander De Croo பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya பேச்சு நடத்தியுள்ளார். இலங்கைக்கும், ஐ.நாவுக்கும் இடையிலான பலமான ஒத்துழைப்பிற்கும், வெள்ள நிவாரணம் மற்றும் வாழ்வாதார உதவிகளில் ஐ.நா. வழங்கிய ஆதரவிற்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார். அத்துடன், நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் பிரதமர் விளக்கமளித்துள்ளார். “ பொதுமக்களின் நம்பிக்கை, நல்லாட்சி மற்றும் நலிவடைந்த சமூகங்களுக்கான […]

இலங்கை செய்தி

இன்று இலங்கை வருகிறது IMF குழு!

  • January 22, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் IMF பிரதநிதிகள் குழு இன்று (22) இலங்கை வரவுள்ளது. டித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதற்காகவே இவர்கள் இலங்கை வருகின்றனர் என தெரியவருகின்றது. பேரிடரால் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது. இலங்கைக்கான அடுத்தக்கட்ட கடன் உதவி பற்றியும் கலந்துரையாடப்படவுள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதிவரை இக்குழு இலங்கையில் தங்கி இருக்கும்.

விளையாட்டு

வெற்றிநடை போடுமா இலங்கை? இன்று மோதல்!

  • January 22, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் ODI போட்டி இன்று (22) நடைபெறுகின்றது. கொழும்பு ஆர். பிரேமதாச RSP மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் மோதவுள்ளது. இதில் முதல் பலப்பரீட்சை இன்று நடைபெறுகின்றது. ரி -20 உலகக்கிண்ணம் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டியானது இலங்கை ஆடுகளம் தொடர்பான அனுபவத்தை இங்கிலாந்துக்கு வழங்கும் என […]

இலங்கை செய்தி

அனர்த்த முகாமைத்துவத்தைக் கையாள புதிய பொறிமுறை அவசியம்!

  • January 22, 2026
  • 0 Comments

அனர்த்த முகாமைத்துவத்தைக் கையாள்வதற்கு புதிய வியூகத்துடன்கூடிய பொறிமுறையொன்று அவசியம் – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஏதேனும் ஒரு அமைச்சின்கீழ் கொண்டுசென்று சொறுவுவதைவிட, அனர்த்த முகாமைத்துவத்துக்கென தனி அமைச்சை அமைப்போம். புதிய வியூகம் மற்றும் பொறிமுறையை உருவாக்குவோம். பேரிடரின்போது எதிரணி தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை என ஆளுங்கட்சி குற்றஞ்சாட்டியது. இதனை நாம் நிராகரிக்கின்றோம். தூதரக மற்றும் இராஜதந்திர […]

விளையாட்டு

இலங்கைக்கு பொருளாதார பலனை தருமா T-20 உலகக்கிண்ண தொடர்?

  • January 21, 2026
  • 0 Comments

ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் கோப்பையை இலங்கையில் காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் இன்று ஆரம்பமானது. இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இன்று (21) முதல் 24 வரை நான்கு நாட்களுக்கு நாட்டின் பல பிரதான நகரங்களில் இது காட்சிப்படுத்தப்படும். அத்துடன், கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இலங்கை-இங்கிலாந்து ஒருநாள் போட்டியின் போது விளையாட்டு ரசிகர்கள் இந்த […]

இலங்கை செய்தி

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி கூறுவது என்ன?

  • January 21, 2026
  • 0 Comments

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் மெதுவாகவே இருக்கும் என உலக வங்கி World Bank கணித்துள்ளது. உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2026 ஆம் ஆண்டில் 3.5 சதவீதமாகவும், 2027 ஆம் ஆண்டில் 3.1 சதவீதமாகவும் இருக்கும். இது 2025 இல் மதிப்பிடப்பட்ட 4.6 சதவீதத்தை விடக் குறைவாகும் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. அண்மைய பொருளாதார நெருக்கடியின் நீடித்த விளைவுகள் […]

இலங்கை செய்தி

டித்வா புயல் குறித்து சபையில் இன்று விவாதம்!

  • January 21, 2026
  • 0 Comments

டித்வா ditwah புயல் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (21) விவாதம் நடைபெறவுள்ளது. இதற்குரிய சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கவுள்ளது. டித்வா புயலை எதிர்கொள்வதற்கு முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது. எனவே, தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காகவே விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு கோரப்பட்டது. அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் மேற்படி குழு நாடாளுமன்றத்துக்கு பிரேரிக்க வேண்டும். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது. […]

error: Content is protected !!