இலங்கை செய்தி

அரசியல் கட்சிக்குரிய அங்கீகாரம்: 78 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

  • January 24, 2026
  • 0 Comments

அரசியல் கட்சியாக பதிவுசெய்யுமாறுகோரி 2025 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட 83 விண்ணப்பங்களில் 78 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் கட்சியாக அங்கீகரிக்கத் தேவையான அடிப்படை அளவுகோல்களை பூர்த்தி செய்யத் தவறியதே பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கமைய ஐந்து விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசியல் கட்சிக்குரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல் அரங்கம், சமத்துவ கட்சி […]

விளையாட்டு

இங்கிலாந்தை இன்றும் வேட்டையாடுமா இலங்கை?

  • January 24, 2026
  • 0 Comments

புத்தாண்டில் ஒருநாள் ODI தொடரை வெற்றிகரமாக ஆரம்பித்த இலங்கை அணி, இங்கிலாந்துடன் இன்று (24) இரண்டாவது போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றது. 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில், இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றால் தொடரை வெல்லும். மறு முனையில் இலங்கைக்கு பதிலடி கொடுத்து, தொடரை வெல்வதற்குரிய முனைப்பில் இங்கிலாந்து அணியும் களமிறங்கவுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை நேரப்படி போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும். முதலாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் (22) […]

அரசியல் இலங்கை செய்தி

மக்கள் முடிவெடுத்தால் பதவி வீடு செல்ல தயார்: பிரதமர் திட்டவட்டம்!

  • January 24, 2026
  • 0 Comments

“நம்பிக்கையில்லாப் பிரேரணை தேவையில்லை, நாட்டு மக்கள் தீர்மானிக்கும் பட்சத்தில் பதவி துறந்து வீடு செல்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” – என்று பிரதமர் கலாநிதி ஹரிணி Dr. Harini Amarasooriya அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த திட்டவட்ட அறிவிப்பை வெளியிட்டார். “ ஆட்சியைக் கவிழ்த்துக்கொள்வதற்கே எதிரணி முயற்சிக்கின்றது. டிசம்பரில் புதிய ஜனாதிபதி என்றார்கள், தற்போது ஏப்ரல் என்கின்றார்கள். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் என்கிறார்கள். எப்போது அது வரும்? அந்த பிரேரணை வரும்வரைதான் […]

இலங்கை செய்தி

அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கு நாள் நிர்ணயம்!

  • January 23, 2026
  • 0 Comments

பெப்ரவரி மாதத்துக்குரிய நாடாளுமன்ற அமர்வு 3 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆம் திகதி சுதந்திர தினம் என்பதால் சபை நடவடிக்கை இடம்பெறமாட்டாது. 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும். நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க மேற்படி தகவலை வெளியிட்டார். ஜனவரி மாதத்துக்குரிய நாடாளுமன்ற அமர்வு இன்றுடன் நிறைவுக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் நடக்காது: ராஜித கருத்து!

  • January 23, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தும் என தான் நம்பவில்லை என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன Rajitha Senaratne தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். அரசாங்கத்துக்கான மக்கள் செல்வாக்கு வீழ்ச்சியடைந்துவருகின்றது. எனவே, தேர்தல் நடத்தப்படும் என நான் நம்பவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணையும் என நம்புகின்றேன். இதற்கு சஜித் இணங்காவிட்டால்கூட இரு தரப்பு இணைவு நிச்சயம் நடக்கும்.” […]

இலங்கை செய்தி

இராஜதந்திர வெற்றியோடு நாடு திரும்பினார் பிரதமர்!

  • January 23, 2026
  • 0 Comments

உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya இன்று (23) பிற்பகல் நாடு திரும்பினார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற குறித்த மாநாட்டுக்கு இணையாக பிரதமர் பல முக்கியத்துவமிக்க மற்றும் வெற்றிகரமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் உட்பட சர்வதேச அமைப்புகளின் முக்கியஸ்தர்களை சந்தித்திருந்தார். மேலும், சிங்கப்பூர் ஜனாதிபதியுடனும் முக்கிய கலந்துரையாடலை நடத்தினார். சுவிட்சர்லாந்தில் வசிக்கும் […]

இலங்கை

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பிக்கு முக்கிய பதவி!

  • January 23, 2026
  • 0 Comments

இலங்கை – பெல்ஜியம் நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அமைச்சர் (வைத்தியர்) சுசில் ரணசிங்க தெரிவு செய்யப்பட்டார். இந்தச் சங்கத்தின் மீளஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. பெல்ஜியத்தின் இலங்கைக்கான ஹொனொரரி கொன்சல் கோன்ராட் பிரிஞ்சியர்ஸ் (Mr. Koenraad Pringiers) கௌரவ விருந்தினராக இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் […]

இலங்கை செய்தி

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சீனா உதவும்: தூதுவர் உறுதி!

  • January 23, 2026
  • 0 Comments

“ டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு சீனா ஒத்துழைப்பு வழங்கும்.” இவ்வாறு இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் Qi Zhenhong உறுதியளித்துள்ளார். கண்டிக்கு நேற்று (23) பயணம் மேற்கொண்ட சீனத் தூதுவர் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார். “ இலங்கையும், சீனாவும் மிகவும் நெருங்கிய நட்பு நாடுகளாகும். எனவே, இலங்கைக்கு உதவி வேண்டியது சீனாவின் கடமையாகும். இலங்கையில் […]

விளையாட்டு

ஒரு நாள் தொடரை வெல்லுமா இலங்கை? நாளை 2 ஆவது போட்டி!

  • January 23, 2026
  • 0 Comments

இலங்கை SL மற்றும் இங்கிலாந்து ENG அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் ODI போட்டி நாளை (24) நடைபெறவுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் RPS இலங்கை நேரப்படி போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள் ODI மற்றும் மூன்று டி20 T-20 போட்டிகளில் ஆடவுள்ளது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று (22) ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் […]

இலங்கை செய்தி

வெளிநாட்டு உதவி: கணக்காய்வு குறித்து ஆராய்வு!

  • January 22, 2026
  • 0 Comments

வெளிநாட்டு நிவாரண உதவி (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின் (HL-FRAC) எட்டாவது கூட்டம் நேற்று (21) நடைபெற்றது. பாதுகாப்பு பிரதித் அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண் ஜயசேகர தலைமையில் பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் மேற்படி கூட்டம் நடைபெற்றது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு நிவாரண உதவிகளை நிர்வகிப்பதில் ஒருங்கிணைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை வலுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அனர்த்த தயார்நிலை மற்றும் நிவாரணப் பொருட்களின் சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக, 22 […]

error: Content is protected !!