விளையாட்டு

சதமடித்து அசத்திய பவன் ரத்நாயக்கவுக்கு அடித்த அதிஷ்டம்!

  • January 29, 2026
  • 0 Comments

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ODI ஆட்டத்தில் சதமடித்து அசத்திய பவன் ரத்நாயக்கவுக்கு Pawan Ratnayake இலங்கை அணியில் மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடர் நாளை (30) ஆரம்பமாகின்றது. கண்டி பல்லேகல மைதானத்தில் Pallekele Stadium இலங்கை நேரப்படி போட்டி இரவு 7 PM மணிக்கு ஆரம்பமாகின்றது. இதில் ஆடவுள்ள இலங்கை அணிக்குள் 23 வயதான பவன் ரத்நாயக்க உள்வாங்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான […]

செய்தி

உரிய திசையில் பயணிக்கும் இலங்கைப் பொருளாதாரம்: IMF பாராட்டு!

  • January 28, 2026
  • 0 Comments

டித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் IMF குழு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் Anura Kumara Dissanayake பேச்சு நடத்தியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று 28) முற்பகல் மேற்படி சந்திப்பு நடைபெற்றது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த IMF பிரதிநிதிகள் குழு, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டனர். அனத்தங்களினால் […]

இலங்கை செய்தி

25 நாட்களுக்குள் 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட பிரிட்டன் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை!

  • January 28, 2026
  • 0 Comments

இலங்கைக்கு கடந்த 25  நாட்களுள் மாத்திரம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 645 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஜனவரி 1 முதல் 25 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15 ஆம் திகதி மாத்திரம் 10 ஆயிரத்து 483 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஜனவரி 1 முதல் 25 வரை இந்தியாவில் இருந்து 41 ஆயிரத்து 603 […]

விளையாட்டு

பழி தீர்க்குமா இலங்கை? 30 ஆம் திகதி பலப்பரீட்சை!

  • January 28, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி நாளை மறுதினம் (30) நடைபெறவுள்ளது. கண்டி பல்லேகல Pallekele மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடிவருகின்றது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. இதன்மூலம் 2023-க்கு பிறகு அந்நிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி […]

இலங்கை செய்தி

இலங்கை–நெதர்லாந்து உறவை வலுப்படுத்த திட்டம்!

  • January 27, 2026
  • 0 Comments

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Wiebe de Boer, இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை Aruna Jayasekara சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (26) மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இதன்போது இருதரப்பு முக்கியத்துவம் தொடர்பான விடயங்கள் மற்றும் இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. பேரிடரின்போதும், அதற்கு பின்னரும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருங்கிணைந்து நெதர்லாந்து வழங்கிய உறுதியான ஆதரவுக்கு பாதுகாப்பு பிரதி […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

கமல்ஹாசன்- இலங்கை துணை தூதுவர் சந்திப்பு: இரு தரப்பு உறவு குறித்தும் ஆராய்வு!

  • January 27, 2026
  • 0 Comments

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான நடிகர் கமல்ஹாசனை, தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கணேசநாதன் கீதீஸ்வரன் மரியாதைப் நிமித்தம் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பில், துணைத் தூதரின் மனைவி கிருத்திகா தேவி மற்றும் தூதரக அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்தியா–இலங்கை இடையிலான வலுவான மற்றும் நீடித்த இருதரப்பு உறவை இந்தச் சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது என மக்கள் நீதி மய்யம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. […]

விளையாட்டு

இறுதி ஆட்டம் இன்று! வெற்றி நடை போடுமா இலங்கை?

  • January 27, 2026
  • 0 Comments

இலங்கை SL மற்றும் இங்கிலாந்து ENG அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் – இறுதியுமான ODI ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில், இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளதால், தொடர் 1–1 என்ற சமநிலையில் உள்ளது. இந்த நிலையில், இன்று நடைபெறும் மூன்றாவது போட்டி தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான ஆட்டமாக அமைந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி […]

இலங்கை செய்தி

ஷிராந்தி ராஜபக்சவுக்கு FCID அழைப்பு!

  • January 27, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச, Shiranthi Rajapaksa பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு FCID இன்று (27) அழைக்கப்பட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் “சிரிலிய” எனும் பெயரில் நடத்திசெல்லப்பட்ட வங்கி கணக்கில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவே ஷிராந்தி ராஜபக்ச அழைக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் 9 மணியளவில் அவர் FCID  இல் முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் இலங்கை செய்தி

இனவாத அரசியல் குறித்து பொன்சேகா எச்சரிக்கை!

  • January 27, 2026
  • 0 Comments

நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்கு சில அரசியல்வாதிகள் முற்படுகின்றனர்.இது தொடர்பில் மகா சங்கத்தினர் விழிப்பாக இருக்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். “ பௌத்த மதமே இந்நாட்டில் பிரதான மதம் என்ற கருத்தில் மாற்று கருத்து கிடையாது. நானும் சிங்கள பௌத்தன்தான்.பௌத்த மதத்தை பாதுகாத்து வந்துள்ளோம். எனினும், சில அரசியல்வாதிகள் இனவாதத்தை தூண்டுகின்றனர். தமது நலனுக்காகவே அவர்கள் இவ்வாறு செயல்படுகின்றனர். இது தொடர்பில் மக்கள், மகா சங்கத்தினர் விழிப்பாக இருக்க […]

விளையாட்டு

வெற்றி மகுடம் யாருக்கு? நாளை பலப்பரீட்சை!

  • January 26, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் ODI போட்டி நாளை (27) நடைபெறுகின்றது. 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில்,   இறுதி ஆட்டதில் வெல்லும் அணியே தொடரில் வெற்றிவாகை சூடும். கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை நேரப்படி போட்டி நாளை பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும். முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றன. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 30 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.  

error: Content is protected !!