இந்தியா

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி மகிழ்ச்சி!

  • February 7, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் மிகச் சிறந்த செய்தி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளார். ‘‘ இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஓர் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளோம். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வலுவான உறவுகளுக்கு காரணமாக இருக்கும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் தனிப்பட்ட அர்ப்பணிப்புக்கு நான் நன்றி கூறுகிறேன்.” எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தம், நமது கூட்டாண்மையின் ஆழம், நம்பிக்கை மற்றம் துடிப்பை பிரதிபலிக்கிறது. […]

உலகம் செய்தி

போர் பதற்றத்துக்கு மத்தியில் ஈரான், அமெரிக்காவுக்கிடையில் ஓமானில் நாளை பேச்சு!

  • February 5, 2026
  • 0 Comments

ஈரான் Iran மற்றும் அமெரிக்கா US ஆகிய நாடுகளுக்கிடையிலான அணு சக்தி தொடர்பான பேச்சு நாளை (06) வெள்ளிக்கிழமை ஓமானில் Oman நடைபெறவுள்ளது. இரு நாடுகளும் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. பேசப்படும் விடயங்கள் மற்றும் சந்திப்பு நடைபெறும் இடம் என்பன தொடர்பில் எழுந்த சர்ச்சையால் இரு தரப்பு சந்திப்பு நடக்காது என ஊகம் வெளியிடப்பட்டிருந்த நிலையிலேயே சந்திப்பு தற்போது உறுதியாகியுள்ளது. சந்திப்புக்குரிய ஏற்பாட்டை செய்த ஓமானுக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி Abbas Araghchi நன்றி […]

இந்தியா

இந்தியாவுடனான உறவு தொடரும்: ரஷ்யா திட்டவட்டம்!

  • February 4, 2026
  • 0 Comments

தமது நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவது தொடர்பில் இந்தியாவிடமிருந்து எதுவும் அறிவிக்கப்படவில்லை என ரஷ்யா Russia தெரிவித்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அந்நாட்டு செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் Dmitry Peskov மேற்படி தகவலை வெளியிட்டார். “ இந்தியாவுடனான India உறவை அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து மேம்படுத்தவே ரஷ்யா விரும்புகிறது” எனவும் அவர் கூறினார். அதேவேளை, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தங்களை ரத்து செய்வது தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் […]

உலகம் ஐரோப்பா

வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு: அமெரிக்காவுக்கான மறைமுக எச்சரிக்கையா?

  • January 29, 2026
  • 0 Comments

சீன ஜனாதிபதி Xi Jinping மற்றும் பிரிட்டன் பிரதமர் Keir Starmer ஆகியோருக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் பார்வை திரும்பியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போரால், நட்பு நாடுகள்கூட கடும் தாக்கத்தை எதிர்கொண்டுவருகின்றன. ஏற்றுமதி பொருளாதாரதில் அமெரிக்காவை மற்றும் சார்ந்திருக்காது, ஏனைய பலம் பொருந்திய நாடுகளில் தமக்குரிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுவருகின்றது. கனடா, ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் சீனாவின் பொருளாதாரம்மீது தமது பார்வையை செலுத்திய நிலையில், […]

உலகம்

சீனா பறக்கிறார் பிரிட்டன் பிரதமர்! புருவத்தை உயர்த்துகிறது ட்ரம்ப் நிர்வாகம்!!

  • January 27, 2026
  • 0 Comments

பிரிட்டன் UK பிரதமர் கியெர் ஸ்டார்மர் Keir Starmer ஜனவரி 28 ஆம் திகதி புதன்கிழமை சீனாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலேயே அவர் பீஜிங் செல்கின்றார். 2018-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரிட்டன் பிரதமர் ஒருவர் சீனா செல்வது இதுவே முதல் முறை என்பதால், இவ்விஜயம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீன ஜனாதிபதியை, பிரிட்டன் பிரதமர் சந்திக்கவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் […]

உலகம் செய்தி

ஈரான்மீது அமெரிக்கா கழுகுப்பார்வை: வளைகுடா நோக்கி நகரும் படை!

  • January 23, 2026
  • 0 Comments

ஈரான்மீது அமெரிக்க தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், வளைகுடாவை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை கப்பல் செல்வது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து Switzerland , டாவோஸில் Davos நடைபெற்ற உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் ட்ரம்ப் Donald Trump பங்கேற்றிருந்தார். மாநாடு முடிந்த பின்னர் இன்று (23) அவர் அமெரிக்கா நோக்கி பயணமானார். நாடு திரும்பும் வழியில் விமானத்திலேயே அவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். “ எதுவும் நடக்க கூடாது என்பதே எனது விருப்பம். ஈரானை […]

இலங்கை செய்தி

ட்ரம்பின் ஈரான்மீதான வர்த்தகப் போரால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏற்படுமா?

  • January 20, 2026
  • 0 Comments

ட்ரம்பின் புதிய வரி விதிப்பால் இலங்கைக்கு நேரடி தாக்கம் ஏற்படாது என தெரிவிக்கப்படுகின்றது. எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால Professor Udayanga Hemapala மேற்படி தகவலை வெளியிட்டார் என ஆங்கில இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 25 வீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். “ ஈரானிடம் இருந்து இலங்கை இனி எரிபொருளை வாங்காது. அந்நாட்டிடம் எண்ணெய் வாங்குவதில் இருந்து இலங்கை […]

உலகம்

அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் வெனிசுலாவில் 83 படையினர் பலி!

  • January 17, 2026
  • 0 Comments

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை Nicolas Maduro சிறை பிடிக்கும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையின்போது 83 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. வெனிசுலா பாதுகாப்பு அமைச்சரால் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி இராணுவ நடவடிக்கையில் 51 வெனிசுலா படையினர் கொல்லப்பட்டனர் . மேலும் 32 பேர் கியூபா படையினர் பலியாகியுள்ளனர். இவர்கள் ஜனாதிபதி மதுரோவின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியுள்ளனர். இதற்கமைய அமெரிக்க இராணுவ நடவடிக்கையின்போது வெனிசுலாவில் மொத்தம் 83 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கையை உலுக்கிய அறகலயவின் பின்னணியின் அமெரிக்க தூதுவர்: பகீர் குற்றச்சாட்டு முன்வைப்பு!

  • January 17, 2026
  • 0 Comments

இலங்கையில் நடந்த “அறகலய”வுக்குரிய திரைக்கதை மற்றும் தயாரிப்பு என இரு பணிகளையும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரே முன்னெடுத்தார் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில Udaya Gammanpila குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். “2022 அறகலயவின்போது திரைக்கதை மற்றும் தயாரிப்பு ஆகிய இரு பணிகளையும் அமெரிக்க தூதுவரே செய்திருந்தார். மிகவும் சூட்சுமமான முறையிலேயே இது நடந்துள்ளது. அமெரிக்க திரைக்கதை என தெரியாமல் எமது இளைஞர்கள் எமது நாட்டு தேசிய கொடியுடன் […]

இலங்கை செய்தி

இலங்கையிலிருந்து நாளை விடைபெறுகிறார் அமெரிக்க தூதுவர்!

  • January 15, 2026
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் Julie Chang, நாளை (16) தாயகம் திரும்புகின்றார். இவ்வாறு விடைபெறவுள்ள தூதுவர், கடந்த சில வாரங்களாக பிரியாவிடை சந்திப்புகளை நடத்திவருகின்றார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பேச்சு நடத்தி இருந்தார். பாதுகாப்பு செயலாளர் உட்பட உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்திருந்தார். பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரியவை நேற்று சந்தித்து பிரியாவிடை பெற்றார். 53 வயதான ஜுலி சங், தென்கொரியாவை […]

error: Content is protected !!