அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி போராட்டம்!

  • January 31, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறுகோரி நாடு தழுவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்துவது குறித்து எதிரணி ஆராய்ந்துவருகின்றது. சட்ட திருத்தம் ஊடாக பழைய முறையிலேயே தேர்தல் நடத்தும் சூழல் உள்ள நிலையில், அதனை இழுத்தடிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என எதிரணி குற்றஞ்சாட்டிவருகின்றது. இந்நிலையிலேயே தேர்தல்கோரி கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தி, அக்கோரிக்கை தொடர்பில் மக்கள் ஆதரவைப் பெறுவதற்கு எதிரணி திட்டமிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்து எதிரணிகளும் இணைந்தே கூட்டு அரசியல் சமராக […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் பிற்போட திட்டம்?

  • January 29, 2026
  • 0 Comments

“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஜே.வி.பி, இன்று ஆட்சியில் இருக்கும்போது மாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றது.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara, தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ தலதாமாளிகைமீது தாக்குதல் நடத்திய கட்சியொன்றின் தலைவரே இன்று ஜனாதிபதியாக உள்ளார். இப்படியானவர்களிடம் எப்படி இன, மத நல்லிணக்கத்தை எதிர்பார்க்க […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் நடக்காது: ராஜித கருத்து!

  • January 23, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தும் என தான் நம்பவில்லை என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன Rajitha Senaratne தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். அரசாங்கத்துக்கான மக்கள் செல்வாக்கு வீழ்ச்சியடைந்துவருகின்றது. எனவே, தேர்தல் நடத்தப்படும் என நான் நம்பவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணையும் என நம்புகின்றேன். இதற்கு சஜித் இணங்காவிட்டால்கூட இரு தரப்பு இணைவு நிச்சயம் நடக்கும்.” […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஐதேக வலியுறுத்து!

  • January 9, 2026
  • 0 Comments

முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி. இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள Thalatha Athukorala கூறியவை வருமாறு, “ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் நிச்சயம் இணைந்து செயல்படும். எனவே, முடிந்தால் அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தட்டும். எமது கூட்டு பலம் என்னவென்பது தெரியவரும். ரணில் விக்கிரமசிங்க என்பவர் நாட்டுக்கு சேவையாற்றிய தலைவர். எனவே, தலைவர் தேர்வின்போது ரணில் […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியும் வலியுறுத்து!

  • January 2, 2026
  • 0 Comments

“தமக்கு மக்கள் ஆதரவு உள்ளதெனக் கூறும் அரசாங்கம், முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தாண்டில் இந்த சவாலை விடுக்கின்றோம்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே, மாகாணசபைத் தேர்தலை […]

அரசியல் இலங்கை செய்தி

புத்தாண்டு பிறந்த கையோடு மாகாணசபைத் தேர்தலை கோருகிறது மொட்டு கட்சி!

  • January 1, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (01) விசேட ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே கட்சி செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam மேற்கண்டவாறு வலியுறுத்தினார். “நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதியின் பிரகாரம் மாகாணசபைத் தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும், தேர்தலை நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அஞ்சுகின்றது […]

இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் இழுத்தடிப்பு!

  • December 31, 2025
  • 0 Comments

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்று நாடாளுமன்று உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற உறுதிமொழியை அரசாங்கம் வழங்கியுள்ளது. ஆனால் அந்த உறுதிமொழி நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏனெனில் சிறுபான்மையினக் கட்சிகள் இதற்கு இடமளிக்காது. அக்கட்சிகளின் அனுமதியுடன்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியும். […]

error: Content is protected !!