உயிரைத்தவிர இழந்த ஏனைய அனைத்தையும் வழங்குவோம்: ஜனாதிபதி!
அனர்த்தத்தால் இழந்த உயிர்களை மீண்டும் பெற முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களுக்கு, முன்னர் இருந்ததை விட சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதே தனது குறிக்கோள் என்றும் அவர் கூறினார். அதற்கான வலுவான திட்டம் தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அந்த மக்களை 2048 வரை காத்திருக்கச் சொல்லப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். டித்வா சூறாவளியால் முழுமையாக வீடுகளை […]






