இலங்கை செய்தி

எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

  • February 6, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, சாதாரண பெரும்பான்மையுடன் மேற்படி சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் இரத்து செய்யப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியளித்திருந்தது. இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, அமைச்சரவை அனுமதியுடன் அதற்குரிய வர்த்தமானி வெளியிடப்பட்டது. அதன்பின்னர் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதற்கு எதிராக சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் […]

இலங்கை செய்தி

இன்று கூடுகிறது நாடாளுமன்றம்: முக்கிய விடயங்கள் குறித்து விவாதம்!

  • January 20, 2026
  • 0 Comments

இலங்கை நாடாளுமன்றம் இன்று (20) முற்பகல் அந்நாட்டு நேரப்படி 9.30 மணிக்கு கூடுகின்றது. ஜனவரி 23 ஆம் திகதிவரை 4 நாட்கள் நடைபெறும் சபை அமர்வுகளின்போது முக்கிய பல விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளன. இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கல்வி மறுசீரமைப்பு சம்பந்தமாக கூடுதல் கவனம் செலுத்தப்படக்கூடும். அத்துடன், இவ்வார நாடாளுமன்ற அமர்வின்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிரணி சபாநாயகரிடம் கையளிக்கக்கூடும் என தெரியவருகின்றது. அதேவேளை, டித்வா புயல் விவகாரம் பற்றி விசாரிப்பதற்காக விசேட […]

இலங்கை செய்தி

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் இரத்து! சட்டமூலம் முன்வைப்பு!

  • January 7, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவால் Harshana Nanayakkara மேற்படி சட்டமூலம் இன்று முன்வைக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்குரிய சட்டமூலத்துக்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கி இருந்தது. இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தில் முதலாவம் வாசிப்புக்கென இன்று முன்வைக்கப்பட்டது. மேற்படி சட்டமூலத்துக்கு எவரேனும் எதிர்ப்பெனில் உயர்நீதிமன்றத்தை நாடலாம். உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானம் வெளியான பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை இடம்பெறும். அதேவேளை, […]

அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டம்: புதிய ஏற்பாட்டுக்கு முன்னாள் நீதி அமைச்சர் போர்க்கொடி!

  • December 26, 2025
  • 0 Comments

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தை நாடுவேன்.” என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapaksa) தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு (Prevention of Terrorism Act) பதிலீடாகவே மேற்படி சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பது தொடர்பான உத்தேச சட்டவரைவு முன்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் பெப்ரவரி 28 ஆம் திகதிவரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே முன்னாள் நீதி அமைச்சர் (former Justice Minister) விஜயதாச […]

error: Content is protected !!