சுரேஷ் சலே 3 நாட்கள் தடுப்பு காவலில்!
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே Suresh Sallay பயங்கரவா தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவர் 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்படவுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று (25) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே மேற்படி தகவல் வெளியிட்டப்பட்டது.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஜீவ மெடவத்த, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் மேற்படி ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட விசாரணைகள் தேவை. எனவே, இந்த கட்டத்தில் விரிவான தகவல்களை வெளியிட முடியாது.” – எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.





