ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க எச்சரிக்கைக்கு எதிர்வினையாற்றியது சீனா! பிரிட்டனும் கைவிரிப்பு!!
ஹார்மூஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களும் முற்றுகையிடப்படும் என அமெரிக்க தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், அனைத்து தரப்புகளும் அமைதியை பின்பற்ற வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
ஊலகளாவிய எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஹார்முஸ் நீரிணை தடையின்றி இயங்குவது அவசியம் என்று சீனா வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச சமூகத்தின் பொதுவான நலன்களைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்க சீனா தயார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனவே, பதற்றமான சூழலைத் தவிர்த்து, உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியை பாதுகாக்க இணைந்து செயல்படுமாறு சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை, ஹார்முஸ் நீரிணைமீதான முற்றுகை நடவடிக்கைக்கு பிரிட்டன் ஆதரவளிக்காது என பிரதமர் Keir Starmer திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்காக ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பதே தமது நாட்டின் முக்கிய நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.





