ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானியாவிற்கு எதிராக திரும்பும் ஸ்டாமரின் வாக்குறுதி!

ஆங்கிலக்கால்வாயில் பயணிக்கும் ரஷ்யாவின் நிழல் கப்பல்களை பிரித்தானியா கைப்பற்றினால், அக்கப்பலில் பணிப்புரிபவர்கள் தஞ்சம் கோர வாய்ப்புள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கடல் பகுதியில் எண்ணெய்க் கப்பல்களைக் கைப்பற்றுவது, ரஷ்ய கூலிப்படையினர் குடியேற்ற விதிகளைத் தவறாகப் பயன்படுத்த வழிவகுக்கும் என்று உள்துறை மற்றும் வெளியுறவுச் செயலாளர்கள் இருவரும் கவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

குறித்த கால்வாயில் பயணம் செய்யும் ரஷ்யாவின் நிழல் கப்பல்களை கைப்பற்றுவதாக பிரதமர் கெய்ர் ஸ்டாமர் சில நாட்களுக்கு முன்பு உறுதியளித்தார்.

இருப்பினும் அத்தகைய நடவடிக்கை “சர்வதேச சட்டத்தை” மீறக்கூடும் என்று லார்ட் ஹெர்மர் சட்ட ஆலோசனை வழங்கிய நிலையில் எந்த கப்பல்களும் கைப்பற்றப்படவில்லை.

இந்நிலையில் பிரிட்டிஷ் படைகளால் கரைக்குக் கொண்டுவரப்பட்ட மாலுமிகள் இங்கிலாந்தில் தஞ்சம் கோர உரிமை பெறுவார்கள் என்று வைட்ஹால் வட்டாரங்கள் தற்போது சுட்டிக்காட்டியுள்ளன.

நிழல் கடற்படையின் எண்ணெய் கப்பல்களில் உள்ள பல பணியாளர்கள், கிரெம்ளினால் பணியமர்த்தப்பட்ட கூலிப்படையினர் ஆவர்.

அவர்கள் ரஷ்யாவுக்கோ அல்லது தங்கள் சொந்த நாடுகளுக்கோ திருப்பி அனுப்பப்பட்டால், தாங்கள் துன்புறுத்தலை எதிர்கொள்ள நேரிடும் என்று வாதிடக்கூடும் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!