வளைகுடா சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரித்தானிய பிரதமர்
பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் தனது மூன்று நாள் வளைகுடா சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, தோஹா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.
கட்டாரின் வெளியுறவு அமைச்சர் Mohammed bin Abdulaziz Al-Khulaifi அவருக்கு பிரியாவிடை அளித்தார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது, புதன்கிழமையன்று Jeddah நகரில் சவூதி பட்டத்து இளவரசர் Mohammed bin Salman அவர்களை ஸ்டார்மர் சந்தித்தார்.
தொடர்ந்து வியாழக்கிழமையன்று அவர் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார்.





