பிரித்தானியாவில் அடுத்த பொதுத் தேர்தலிலும் போட்டியிடும் ஸ்டாமர்!
பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) , தனது பதவி விலகலுக்கான சமீபத்திய அழைப்புகள் இருந்தபோதிலும், அடுத்த பொதுத் தேர்தலில் தொழிற்கட்சியை வழிநடத்தும் தனது நோக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
பீட்டர் மண்டேல்சனை அமெரிக்க தூதராக நியமித்த விவகாரம் ஸ்டாமரின் அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய பிரச்சினையை கொண்டுவந்தது.
குறிப்பாக மண்டேல்சனை பரிந்துரைத்த தலைவர் உள்பட பலர் பதவி விலகினர். இந்நிலையில் ஸ்டாமரும் பதவி விலக வேண்டும் என தொழிற்சங்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர்.
அத்துடன் பொதுமக்கள் மத்தியில் ஸ்டாமரின் புகழ் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடும் முனைப்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




