இலங்கை செய்தி

இலங்கையின் சுற்றுலாத்துறை 19.7 வீதத்தால் வீழ்ச்சி!

இலங்கையின் சுற்றுலாத்துறை 2026 மார்ச் மாதம் 19.7 சதவீத வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

மேற்காசியாவில் நிலவிய போர் பதற்றம் காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்த பயணிகள், போர்ச்சூழலால் தமது பயணத்தை இரத்து செய்தனர்.

இதனால் சுற்றுலாத்துறையில் முதல் காலாண்டில் இலங்கை நிர்ணயித்த இலக்கை அடைய முடியாமல்போயுள்ளது.

வான்வெளி மூடல்கள் மற்றும் விமான ரத்துகளாலேயே இந்நிலை ஏற்பட்டது.

2018 மார்ச் மாதம் இலங்கைக்கு 233,382 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.

2025 மார்ச் மாதம் 229,298 பேர் வருகை தந்;திருந்தனர்.
இந்நிலையில் இவ்வருடம் மார்ச் மாதம் 183,979 பேரே வருகை தந்துள்ளனர்.

இதற்கமைய கடந்த மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 19.7 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

2026 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என முன்னதாக கணிக்கப்பட்டிருந்தது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!