இலங்கை: இஷாரா செவ்வந்தி தொடர்பில் வெளியான புதிய தகவல்!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியின் பின்னணியில் பல பாதாள உலகக் கும்பல்களின் தலைவர்கள் இருப்பது சமீபத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இஷாரா செவ்வந்தி கடந்த காலங்களில் பல்வேறு பாதாள உலகக்கும்பல்களுடன் தொடர்பைப் பேணியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டிருந்தாலும் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி இதுவரை கைது செய்யப்படவில்லை.
குறித்த பெண்ணை கைது செய்யும் நடவடிக்கையைத் தொடர்ந்தும் காவல்துறை முன்னெடுத்து வருகிறது.
(Visited 1 times, 1 visits today)