இலங்கை, ஆஸ்திரேலியா இன்று மோதல்!
T-20 உலகக்கிண்ண தொடரில் பலம்பொருந்திய இரு அணிகள் இன்று (18) பலப்பரீட்சை நடத்துகின்றன.
இலங்கை Sri Lanka மற்றும் ஆஸ்திரேலியா Australia அணிகள் மோதும் ஆட்டம் இரவு 7 மணிக்கு கண்டி , பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.
உலகக்கிண்ண தொடரில் தான் எதிர்கொண்ட முதல் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது,
இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால் சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துவிடும்.
சிம்பாப்வே அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா அணிக்கு, அடுத்த சுற்று தொடர்பான எதிர்பார்ப்பை தக்கவைக்க இன்றைய வெற்றி மிக முக்கியம்.
அதேவேளை, ஆப்கானிஸ்தான் Afghanistan, ஐக்கிய அரபு அமீரகம் United Arab Emirates ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று முற்பகல் 11 மணிக்கு டெல்லியில் நடைபெறுகின்றது.
இங்கிலாந்து England மற்றும் இத்தாலி Italy அணிகளுக்கிடையிலான ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு இந்தியாவில் இடம்பெறுகின்றது.




