இலங்கை செய்தி

சாதாரண தரப் பரீட்சை நிலையங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள நிலையங்களைச் சுற்றி விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பரீட்சை நிலைய வளாகங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை இனங்கண்டு அவற்றை அழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்காகப் புகை விசிறும் (Fogging) நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பரீட்சை காலப்பகுதியில் மாணவர்கள் எவ்வித இடையூறுமின்றித் தமது பரீட்சைகளை எழுதுவதற்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும்” என்றார்.

மேலும், பாடசாலை அதிகாரிகள் மற்றும் பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர்களின் (PHI) ஒத்துழைப்புடன் பரீட்சை மண்டபங்களைத் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சு மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!