இலங்கை செய்தி

வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக சிவரஞ்சினி நியமனம்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) திருமதி சிவச்செல்வன் சிவரஞ்சினி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (19.02.2026) காலை நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் இதற்கான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

இந்நியமனமானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மாநகர சபையின் ஆணையாளராகப் பொறுப்பேற்கவுள்ள திருமதி சிவச்செல்வன் சிவரஞ்சினி, இதற்கு முன்னர் வவுனியா மாவட்ட தொழில் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!