நீரிழிவு நோயை ஏற்படுத்தும் வேலைகள் குறித்து ஸ்வீடன் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
பல துறைகளில் பணிபுரிபவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக ஸ்வீடன் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுகாதாரம், கற்பித்தல், சமூக சேவைகள், நுகர்வோர் சேவைகள் அல்லது போக்குவரத்து போன்ற வேலைகளில் பணிபுரிபவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம் என்று தெரியவந்துள்ளது.
2006 முதல் 2020ஆம் ஆண்டு வரை 3 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கண்காணித்து இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
மோதல் சூழலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 24% அதிகமாக உள்ளது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மன அழுத்தம் இரத்த சர்க்கரையை நிர்வகிக்கும் உடலின் திறனை சேதப்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.





