இலங்கை செய்தி

மணல் கடத்தல்: உழவு இயந்திரம்மீது STF துப்பாக்கிச்சூடு! சாரதி தப்பியோட்டம்!

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம்மீது விசேட அதிரடிப்படையினர் STF துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரந்தன் பூநகரி வீதி பகுதியிலேயே நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோதமான முறையில் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச் செல்லப்படுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய மணல் ஏற்றி பயணித்த இரண்டு உழவு இயந்திரங்களை, விசேட அதிரடிப்படையினர் தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

எனினும், சமிக்கையை மீறி அவை சென்றமையால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையை சேர்ந்த ஒருவர் உழவு இயந்திரத்தில் மோதுண்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளார்.

உழவு இயந்திர சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றைய உழவு இயந்திர சாரதி தப்பியோடியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!