வீட்டோ அதிகாரத்தை கையிலெடுத்த ரஷ்யா, சீனா – ஹார்முஸ் பாதுகாப்பு தீர்மானம் தோல்வி
ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட கூட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேறவில்லை.
பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினரான ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. இதன் காரணமாக தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
பஹ்ரைன் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லத்தீப் பின் ரஷித் அல் சயானி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
அதேவேளை, பாகிஸ்தான் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பல வாரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர், ஆரம்பத்தில் இராணுவ பலத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் கடுமையான நிபந்தனைகளுடன் முன்வைக்கப்பட்டிருந்த இந்தத் தீர்மானம், பின்னர் தளர்த்தப்பட்டு “பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்” நிலைக்கு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வீட்டோ அதிகாரம் என்றால் என்ன?
வீட்டோ (Veto) அதிகாரம் என்பது ஒரு முடிவை அல்லது சட்டத்தீர்மானத்தை ஏகமனதாகத் தடுத்து நிறுத்தும் சிறப்புரிமை ஆகும்.
இலத்தீன் மொழியில் “நான் தடை செய்கிறேன்” என்று பொருள்படும் இது, பெரும்பாலும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் (UNSC) உள்ள ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு (அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து) வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஐந்தில் ஒரு நாடு எதிர்த்தாலும் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படாது




