ஐரோப்பா

உக்ரைனின் பொதுபோக்குவரத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திய ரஷ்யா – மூவர் பலி!

கிழக்கு டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் (Dnipropetrovsk) பிராந்தியத்தின் நிகோபோல் நகரில் (Nikopol), பேருந்தொன்றின்மீது இன்று ஆளில்லா விமானம் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தைப் பாதித்த இந்தத் தாக்குதலை உக்ரேனிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

மக்கள் வேலைக்குச் சென்று கொண்டிருந்த பரபரப்பான நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்ததாகவும், இது ஒரு “பேரழிவுத் தாக்குதல்” என்றும் உள்துறை அமைச்சர் இஹோர் கிளிமென்கோ (Ihor Klymenko) விவரித்துள்ளார்.

இதற்கிடையில், உக்ரேனின் தெற்குத் துறைமுக நகரமான ஒடெசாவில் இரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு கடுமையாக சேதமடைந்ததாகவும், இதில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு வயதுக் குழந்தை கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும்  கர்ப்பிணிப் பெண் ஒருவர் உள்பட   ஒரு வயதுக்குட்பட்ட  குழந்தை மற்றும் இரண்டு குழந்தைகள் என பதினொரு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!