மோதல் காரணமாக உலக உணவுப் பொருட்களின் விலை மீண்டும் உயர்வு
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரின் காரணமாக உலகெங்கிலும் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல்வேறு உணவுப் பொருட்களின் சர்வதேச விலைகளை அளவிடும் தனது மாதாந்திர உணவு விலைக் குறியீடு, பெப்ரவரி முதல் மார்ச் வரை 2.4% அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) கூறுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுடன் தொடர்புடைய எரிசக்தி விலைகள் அதிகரித்ததன் காரணமாக, இந்தக் குறியீடு தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது என்று FAO கூறுகிறது.




