பிரித்தானியாவின் அடுத்த தேர்தலில் Reform UK முன்னணி – வெளியான கருத்து கணிப்பு
அடுத்த தேர்தலில் கம்ப்ரியா (Cumbria) நிர்வாகப் பிரிவில் ரிஃபார்ம் யுகே (Reform UK) கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றிப்பெறக்கூடும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த முடிவு காரணமாக, கம்ப்ரியா (Cumbria) நிர்வாகப் பிரிவில் ரிஃபார்ம் யுகே (Reform UK) கட்சி முன்னணியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
UKIP கட்சியின் முன்னாள் தலைவர் நிகல் ஃபரேஜ் (Nigel Farage) தலைமையிலான ரிஃபார்ம் யுகே (Reform UK), கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது.
இந்தக் கட்சி கிராமப்புறங்களிலும் தொழில்துறை பகுதிகளிலும் நாடு முழுவதும் வாக்குகளைப் பெற்றது.
அண்மைய கருத்துக் கணிப்பின் படி, பாரோ (Barrow), கார்லைல் (Carlisle), வொர்க்கிங்டன் (Workington) மற்றும் வைட்ஹேவன் (Whitehaven) ஆகிய இடங்களில் ரிஃபார்ம் யுகே (Reform UK) வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ரிஃபார்ம் யுகே (Reform UK), வைட்ஹேவன் (Whitehaven) மற்றும் வொர்க்கிங்டன் (Workington) பகுதிகளில் டோரிகள் (Tories) கட்சியை இரண்டாவது இடத்திற்குத் தள்ளியது.
இதனிடையே, தொழிற்கட்சி (Labour Party) முன்பு இழந்த தங்களின் இடங்களை கம்ப்ரியா (Cumbria) நிர்வாகப் பிரிவில் மீண்டும் பெற்றதாக கூறப்படுகிறது.
இதேவேளை, நிகழ்நிலை ஆய்வு நிறுவனம் எலெக்ஷன் மேப்ஸ் யுகே (Election Maps UK) வெளியிட்ட கணிப்பின் படி, ரிஃபார்ம் யுகே (Reform UK) 330 இடங்களுடன் பெரும்பான்மை பெறும் என கூறப்படுகிறது.
தொழிற்கட்சி 82 இடங்களுடன் இரண்டாவது இடத்தைப் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
லிபரல் டெமாக்ராட்டுகள் (Liberal Democrats) 77 இடங்களையும், டோரிகள் (Tories) 55 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என அந்தக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





