‘Rebuilding Sri Lanka’ – Automobile Association of Ceylon 25 மில்லியன் ரூபா நிதியுதவி
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, Automobile Association of Ceylon 25 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது.
இதற்கான காசோலையை Automobile Association of Ceylon இன் தலைவர் தம்மிக ஆட்டிகல, இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்கவிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வில் Automobile Association of Ceylon இன் செயலாளர் தேவப்பிரிய ஹெட்டியாரச்சி, Automobile Association of Ceylon இன் உறுப்பினர்களான பி.பி. குலதுங்க, எல்.டபிள்யூ. டி சொய்சா குணரத்ன, பி.எச். லியனகே, இந்துனில் உதய ஆகியோரும் கலந்துகொண்டனர்.





