ஐரோப்பா

உக்ரைன் – ரஷ்யா இடையே கைதிகள் பரிமாற்றம்!

ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் போர்நிறுத்தம் தொடங்குவதற்கு முன்னதாக, உக்ரைனும் ரஷ்யாவும் நேற்று தலா 175 போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொண்டுள்ளன.

இந்தப் பரிமாற்றத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் மத்தியஸ்தம் செய்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

ரஷ்யச் சிறையிலிருந்து 175 ராணுவ வீரர்களையும் ஏழு பொதுமக்களையும் உக்ரைனுக்கு அழைத்து வந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky)  தெரிவித்தார்.

உக்ரேனிய பாதுகாப்பு உளவுத்துறைப் பிரதிநிதியான ஆண்ட்ரி யூசோவ், விடுவிக்கப்பட்டவர்களில் 163 பேர் 2022 முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறியுள்ளார்.

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!