கனடாவில் இந்து ஆலயங்களில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணி – பொலிஸார் எச்சரிக்கை!
கனடாவில் உள்ள இரண்டு முக்கிய கோயில்களுக்கு வெளியே இன்று காலிஸ்தான் ஜிந்தாபாத் பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரேட்டர் டொராண்டோ (Greater Toronto) பகுதியில் உள்ள திரிவேணி ஆலயம் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் (British Columbia) சர்ரேயில் (Surrey) உள்ள லட்சுமி நாராயண் ஆலயத்தில் இந்த பேரணிகள் இடம்பெறவுள்ளன.
இந்தப் பேரணிகளுக்கான அழைப்பை, சீக்கியர்களுக்கான நீதி (SFJ) என்ற பிரிவினைவாதக் குழு விடுத்துள்ளது.
இந்நிலையில், சட்டவிரோதச் செயல்களும் குற்றச் செயல்களும் பொறுத்துக்கொள்ளப்படாது என்று சட்ட அமலாக்கத் துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், சட்டவிரோதச் செயல்களும் குற்றச் செயல்களும் பொறுத்துக்கொள்ளப்படாது. வெறுப்புக்கு இங்கு இடமில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை “சட்டப்பூர்வமான மற்றும் அமைதியான முறையில் கூடுவதற்கான உரிமையை” ஆதரிப்பதாகவும், பொது ஒழுங்கையும் கூட்டப் பாதுகாப்பையும் பேணுவதற்காக அதிகாரிகள் அங்கு இருக்கும் நிலையில், ஆர்ப்பாட்டம் அனைவருக்கும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய அமைப்பாளர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.





