உலகம்

ட்ரம்ப், நெதன்யாகுவை நாஜி சீருடையில் சித்தரிக்கும் சுவரொட்டிகளை கைப்பற்றிய பொலிஸார்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உலகத் தலைவர்களை நாஜி சீருடையில் சித்தரிக்கும் நையாண்டி சுவரொட்டிகளை ஆஸ்திரேலிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கான்பெராவில் (Canberra) உள்ள டிஸ்சென்ட் கஃபேயில் (Dissent) இருந்து குறித்த சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கஃபே உரிமையாளர் டேவிட் ஹோவ் (David Howe) கலைப்படைப்பை ஒரு குற்றச் சம்பவமாகக் கருதியதற்காக  பொலிஸாரின் மேற்படி நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் புதிய சட்டம் தடைசெய்யப்பட்ட சின்னங்களை பொதுவில் காட்சிப்படுத்துவதை குற்றமாக்குகிறது, ஆனால் கலை, கல்வி மற்றும் பத்திரிகை நோக்கங்களுக்காக அவற்றை காட்சிப்படுத்துவதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் மேற்படி சட்டத்தின் கீழ் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!