ஐரோப்பா செய்தி

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது: வின்ட்சரில் பதற்றம் – ரோயல் லொட்ஜை சூழ்ந்த பொலிஸார்

வின்ட்சரில் உள்ள ரோயல் லொட்ஜ் வளாகத்தில் தொடர்ந்து பொலிஸ்  சோதனைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத பல பொலிஸ் வாகனங்கள் அங்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொது அலுவலகத்தில் தவறான நடத்தை குறித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், வியாழக்கிழமை இரவு சுமார் 11 மணி நேர விசாரணைக்கு பிறகு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பின்னர்  அவர் சாண்ட்ரிங்ஹாம் தோட்ட வளாகத்திற்குத் திரும்பியதாக கூறப்படுகிறது.

“விசாரணையின் கீழ் விடுவித்தல்” என்பது குற்றச்சாட்டு தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெறும் வரை, குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கும் நடைமுறையென சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த கைது குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படாத மன்னர்  மூன்றாம் சார்லஸ், செய்தியை அறிந்தபோது “மிகவும் கவலையடைந்தார்” என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மறைந்த பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடனான உறவுகள் குறித்த குற்றச்சாட்டுகளை ஆண்ட்ரூ முன்பே மறுத்திருந்த போதிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!