செய்தி

புறாக்கள் உயிரோடு எரிப்பு: நெடுந்தீவில் கொடூரம்!

இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்திவரப்பட்டு, நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன.

பொலிஸாரைக் கண்டதும் அச்சம் காரணமாக உரிமையாளர்களால் இந்த கொடூரச் செயல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்னர், இந்தியாவிலிருந்து 144 புறாக்கள் கடல் மார்க்கமாக நெடுந்தீவுக்குக் கடத்தி வரப்பட்டுள்ளன.

அங்கிருந்து பகுதி பகுதியாக யாழ்ப்பாணத்திற்குப் புறாக்களைக் கடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

நேற்று முதற்கட்டமாக 44 புறாக்களைக் குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்துச் சென்றபோது, கடற்படையினர் அவற்றை வழிமறித்து மூவரைக் கைது செய்தனர்.

பின்னர், சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், எஞ்சிய நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் நெடுந்தீவில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை உறுதியானது.

நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புறாக்களை மீட்பதற்காகப் பொலிஸார் வருவதை அறிந்த வீட்டின் உரிமையாளர்கள், சட்ட நடவடிக்கைக்கும் ஆதாரங்களுக்கும் அஞ்சி அதிர்ச்சிகரமான முடிவை எடுத்தனர்.

புறாக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டுக்கு மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்தபோது, சுமார் 50 இற்கும் மேற்பட்ட புறாக்கள் தீயில் கருகி உயிரிழந்தும், காயங்களுடன் துடிதுடித்துக் கொண்டும் இருந்துள்ளன.

எஞ்சிய புறாக்களையாவது காப்பாற்றும் நோக்கில் பொலிஸார் உடனடியாகக் கூண்டைத் திறந்து விட்டுள்ளனர். இதன் மூலம் ஏனைய புறாக்கள் பறந்து சென்று உயிர் தப்பின.

இந்தக் கொடூரச் செயல் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, தப்பியோடிய வீட்டின் உரிமையாளர்களைத் தேடி வருகின்றனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!