ஆசியா

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற பாகிஸ்தானிய பெண்!

பாகிஸ்தானில் ஒரெ பிரசவத்தில் பெண்ணொருவர் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள மாவட்ட தலைமையக மருத்துவமனையில் பிரசவ வலி காரணமாக முகமது வஹீத்தின் மனைவி ஜீனத் வஹீத்(27) கடந்த 18ம் திகதி இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் கடந்த 19 திகதி காலை 6 குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த பெண் ஒரு மணித்தியாலத்திற்கு 6 குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக அவர் பெற்றெடுத்துள்ளார்.

பிறந்த குழந்தைகளில் 4 ஆண், 2 பெண் குழந்தைகள் என்றும் ஒவ்வொன்றும் இரண்டு கிலோவுக்கு குறைவான எடை கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 குழந்தைகளும் அவர்களின் தாயும் நலமாக இருப்பதாக மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பர்சானா தெரிவித்துள்ளார்.மேலும், 4.5 மில்லியன் பெண்களில் ஒருவர் மட்டுமே இவ்வளவு அரிதாக கர்ப்பம் தரிப்பதாக டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்