உலகம் செய்தி

போர் நிறுத்தம்: பாகிஸ்தானின் உதவியை கோருகிறது லெபனான்!

பாகிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளின் பிரதமர்களுக்கிடையில் தொலைபேசி ஊடாக முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது லெபனான்மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களை பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif வன்மையாகக் கண்டித்துள்ளார்.

அதேபோல இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த பாகிஸ்தான் உதவ வேண்டும் என லெபனான் பிரதமர் Nawaf Salam கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்கும் பொருந்தும் என மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்ட பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஈரானும் இதனையே குறிப்பிட்டுள்ளது. எனினும், போர் நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்கு பொருந்தாது என அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என்பன திட்டவட்டமாக அறிவித்துள்ளன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பாகிஸ்தானின் உதவியை லெபனான் பிரதமர் கோரியுள்ளார்.

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புமீதான தாக்குதல் தொடரும் என இஸரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!