Operation Sindoor – பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் எல்லைகளில் வான் பாதுகாப்பு அமைப்புகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலையும் பிறப்பித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் போர்ப் பதற்றம் விரைவில் தணியும் என்றார்.
இரு நாடுகளும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். மேலும், ராணுவ நடவடிக்கைகளில் இருந்தும் இரு நாடுகளும் பின்வாங்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் குட்டரேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து புதன்கிழமை காலை 10 மணியளவில் விவரம் அளிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த திடீர் நடவடிக்கை குறித்து அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளிடமும் இந்தியா விளக்கமளிக்கிறது.