ஐரோப்பா

ஐரோப்பா மீது அணு ஆயுத தாக்குதல் உறுதி – Segey Karaganov தகவல்

ஐரோப்பாவில் அணு ஆயுதங்களால் இலக்கு வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நாடுகளில் இருந்து ரஷ்ய மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அரசாங்கம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் Segey Karaganov என்பவர் தெரிவிக்கையில், ஐரோப்பா மீதான அணு ஆயுத தாக்குதல் என்பது காலத்தின் கட்டாயம் எனவும், ஆனால் அதற்கு முன்னர் இந்த நாடுகளில் குடியிருக்கும் ரஷ்ய மக்களை பத்திரமாக வெளியேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.ரஷ்யாவின் வெளிவிவகாரம் மற்றும் பாதுகாப்பு கொள்கை கவுன்சில் தலைவராக செயல்பட்டுவருபவர் இந்த Segey Karaganov. உக்ரைனுக்கு ஆயுத பலத்தை அதிகரிக்க செய்யும் நாடுகள் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்த விளாடிமிர் புடின் ஒப்புதல் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், இதனால் அவர்கள் கண்டிப்பாக ரஷ்யாவிடம் மண்டியிடுவார்கள் என்றார்.

அணுசக்தி தாக்குதல் உறுதி... ஐரோப்பா நாடுகளில் இருந்து ரஷ்ய மக்களை வெளியேற்றவிருக்கும் புடின் | European Nuclear Targets Kremlin Warn Russians

பிரித்தானியாவும் அமெரிக்காவும் தான் உக்ரைனுக்கு இதுவரை அதிகமான ஆயுதங்களை வழங்கியுள்ளது. இதனிடையே, இந்த போரில் தம்முடன் இணையும் நாடுகளுக்கு அணு ஆயுதம் அளிக்கப்படும் என ரஷ்யா தற்போது வாக்குறுதி அளித்துள்ளது.ரஷ்யாவால் மட்டுமே கொள்கையுடன் செயல்பட முடியும் என குறிப்பிட்டுள்ள Segey Karaganov, ஐரோப்பா மீதான தாக்குதல் கண்டிப்பாக அமெரிக்காவை பதில் தாக்குதலுக்கு தூண்டும் என்றார்.

இதனிடையே, பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை நிலை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் திட்டமிட்டுவருவதாக கூறப்படுவதை வரவேற்றுள்ள Segey Karaganov, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பெலாரஸ் நாட்டில் ரஷ்யாவின் அணு ஆயுதத்தை நிலை நிறுத்துவதை வரவேற்றுள்ள அந்த நாட்டின் ஜனாதிபதி Alexander Lukashenko, ஆனால் தற்காலத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில் கவனம் தேவை எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை நிலை நிறுத்துவது தொடர்பில் ரஷ்யாவின் முடிவை அமெரிக்கா கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்