காசாவிற்கான எரிபொருள் விநியோகம் குறித்து திட்டம் எதுவும் இல்லை – பெஞ்சமின் நெதன்யாகு!
காசாவிற்கு எரிபொருளை மாற்றுவது குறித்து தனது அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
இருப்பினும், உணவு, எரிபொருள் மற்றும் தண்ணீர் போன்ற கட்டாய மனிதாபிமான உதவிகளுக்கு இஸ்ரேல் உதவுவதாக அவர் கூறினார்.
இதேவேளை இஸ்ரேலிய டாங்கிகள் பல காசா பகுதியின் தெற்கு மண்டலத்திற்குள் நுழைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காசாவின் தெற்கு வலயத்திற்குள் 10க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய டாங்கிகள் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், ஹமாஸின் ஆயுதப் பிரிவு இஸ்ரேலிய டாங்கிகள் தெற்குப் பகுதிக்கு செல்வதைத் தடுக்க ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
காஸா நகருக்கு தெற்கே அமைந்துள்ள வைத்தியசாலைக்கு அருகில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
(Visited 3 times, 1 visits today)