இந்தியா செய்தி

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் வேண்டாம்: காங்கிரஸ் வலியுறுத்து!

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை பா.ஜ.க. அரசு நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே, காங்கிரஸ் இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ்,

“வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

மேலும் இந்திய-அமெரிக்க கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களைப் பயன்படுத்தி, விவசாயப் பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதில் அமரிக்காவுக்கு உள்ள சுதந்திரத்தை இரத்து செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது என ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த 2 ஆம் திகதி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!