அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை: நாளை நடக்கப்போவது என்ன?

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு Kumara Jayakody எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது நாடாளுமன்றத்தில் நாளை (10) விவாதம் நடத்தப்படவுள்ளது.

மேற்படி பிரேரணையை தோற்கடிப்பதற்குரிய பெரும்பான்மை பலம் ஆளுங்கட்சி வசம் இருப்பதால் அது தோல்வி அடையும் என்பது உறுதி.

எனினும், தரமற்ற நிலக்கரி இறக்குமதிமூலம் இடம்பெற்றுள்ள மோசடியை வெளிப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கம் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் அரசுக்கு பல கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது உட்பட மேலும் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தே வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணைமீ நாளை (10) முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடத்தப்பட்டு, அதன்பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணைமீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!