இந்தியாவில் இருந்து நைஜீரியாவிற்கு நாடு கடத்தப்பட்ட நபர்
இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சட்டவிரோதமாக வசித்து வந்த நைஜீரிய(Nigeria) நாட்டவர் ஒருவர், ஹைதராபாத்(Hyderabad) போதைப்பொருள் அமலாக்கப் பிரிவு, வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்துடன் (FRRO) ஒருங்கிணைந்த முயற்சியில் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
விசா காலாவதியாகி தங்கி சட்டவிரோத நடவடிக்கைகளில், குறிப்பாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் வெளிநாட்டினரைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நாடு கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நைஜீரியாவின் இமோ(Imo) மாகாணத்தைச் சேர்ந்த 43 வயதான ஜோன்கென்னடி சுக்வுமேகா ஒகோரோ(Johnkennedy Chukwuemeka Okoro, ஆரம்பத்தில் 2012ம் ஆண்டு வணிக விசாவில் மும்பைக்கு வந்துள்ளார்.
உளவுத்துறையின் அடிப்படையில், ஹைதராபாத்தின் ஆசிப் நகர்(Asif Nagar) காவல் நிலைய எல்லைக்குள் ‘ஹோபி கப்'(Hopy Cup) மற்றும் ‘ஜெக்சா'(Jeksa) உள்ளிட்ட மாற்றுப் பெயர்களைப் பயன்படுத்தி வசித்த வந்த ஒகோரோ கைது செய்யப்பட்டுள்ளார்.




