ஆப்கானிஸ்தானின் கனவை பறித்த நியூசிலாந்தின் வெற்றி!
நியூசிலாந்து New Zealand மற்றும் கனடா Canada ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
T20 உலகக்கிண்ண தொடரில் 31வது லீக் ஆட்டம் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கனடா மற்றும் நியூசிலாந்து அணிகள் போட்டியிட்டன.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கனடா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
யுவராஜ் சம்ரா 65 பந்துகளில் 110 ஓட்டங்களை விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு கனடா அணி 173 ஓட்டங்களைப் பெற்றது.
நியூசிலாந்து அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.




