ஆஸ்திரேலியாவில் அமுலாகும் புதிய சட்டம் – நாடு கடத்தப்படவுள்ள குற்றவாளிகள்
குற்றவாளிகளின் வீசா இரத்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து அவர்களை நாடு கடத்துவது தொடர்பான சட்டங்களை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அரசாங்கம் DIRECTION 99 எனப்படும் சட்ட விதியை மாற்றியமைத்துள்ளது.
குடிவரவு அமைச்சர் அன்ட்ரூ கில்ஸ் முன்வைத்த புதிய மாற்றங்களுக்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய சட்டத்தின் மூலம் முன்னர் நாடு கடத்த முடியாத குற்றவாளிகளை நாடு கடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னைய சூழ்நிலையின்படி, குற்றவாளி ஒருவரை நாட்டிலிருந்து நாடு கடத்தும் போது, குற்றவாளிக்கும் நாட்டுக்கும் இடையிலான நீண்ட கால உறவு குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
புதிய சட்டத்தின் கீழ், குற்றவாளிக்கும் நாட்டுக்கும் இடையிலான நீண்டகால உறவை கருத்தில் கொள்ள வேண்டும் என்ற சரத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கற்பழிப்பு தொடர்பான குற்றவாளிகளை நாடு கடத்துவதற்கு முந்தைய ஷரத்துகள் காரணமாக தடைகள் எழுந்தன.
இந்த புதிய மாற்றங்கள் தொடர்பில், அவுஸ்திரேலிய நிர்வாக தீர்ப்பாயத்தின் ஊடாக குற்றவாளிகளின் விசாக்களை ரத்து செய்வதில் சமூக பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.